சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை
ட்ரம்பின் பரஸ்பர வரி: 'பாதிக்கும் துறைகள்; அடிவாங்கும் பங்குகள்!'- இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?
அமெரிக்க அதிபர் கூறிய இந்தியாவின் மீதான 'பரஸ்பர் வரி' நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால், இந்தியாவின் எந்தெந்த துறை பாதிக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட மாதுபானங்களுக்கு 122.10 சதவிகித வரி விதிக்கப்படும். இதுதான் மிகப்பெரிய பரஸ்பர வரியாக இருக்கும்.
நெய், வெண்ணெய், பால் பவுடர் போன்ற பால் பொருள்களுக்கு 38.23 சதவிகித வரி விதிக்கப்படும்.
மீன், மாமிசம், பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் போன்றவற்றிற்கு 27.83 சதவிகித விதிக்கப்பட உள்ளது.
உயிருள்ள விலங்குகள் மீது 27.75 சதவிகித வரி விதிக்கப்படும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை போன்ற ஏற்றுமதிகளுக்கு 24.99 சதவிகித ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.
காலணிகளுக்கு 15.56 சதவிகித வரி விதிக்கப்படும்.
வைரம், தங்கம், வெள்ளி போன்ற ஏற்றுமதிகளுக்கு 13.32 சதவிகித வரி.
தொழிற்சாலை பொருள்கள் மற்றும் எண்ணெய்களுக்கு முறையே 10.90 மற்றும் 10.67 சதவிகித ஏற்றுமதி வரி ஆகும்.
2021-22 நிதியாண்டில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் 18 சதவிகித பொருள்கள் அமெரிக்காவிற்கு சென்று சேர்கிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் உள்ள 30 துறைகளில் இந்திய பொருள்கள் பயன்படுகிறது. அமெரிக்காவில் இருந்து 6.22 சதவிகித பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.
பரஸ்பர வரியினால் ஏற்பாடும் பாதிப்பு என்ன?
இந்திய ஏற்றுமதிகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் போது, அமெரிக்காவில் அந்தப் பொருள்களின் விலை தாறுமாறாக உயரும். அதன் நுகர்வு குறையும். விளைவு, ஏற்றுமதியும் குறையும்.

இதனால், இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறையும். இந்திய பொருளாதாரம் பாதிப்படையும்.
வரி குறைப்பு சம்பந்தமாக இந்தியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், வரி குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு மட்டும் தான் வெளியாக உள்ளது.
இந்த வரி குறைப்பு சம்பந்தமாக இந்திய அரசு சீக்கிரம் எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.