Career: Arts, Science-ல் UG Degree இருக்கா? ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார் வ...
ஆர்சிபி பேட்டிங்: குஜராத் அணியில் ரபாடா விலகல்!
ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன.
இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
குஜ்ராத் அணியில் ரபாடா காயம் காரணமாக விலகியதால் அர்ஷத் கான் அணியில் இனைந்துள்ளார்.
ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் இல்லையென கேப்டன் ரஜத் படிதார் கூறியுள்ளார்.
இரு அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பெங்களூரு ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்புடன் வருகிறது. முதல் ஆட்டத்தில் தோற்ற குஜராத், கடந்த ஆட்டத்தில் வெற்றி கண்ட உத்வேகத்துடன் இருக்கிறது.
பெங்களூரு அணியைப் பொருத்தவரை, நடப்பு சாம்பியன் கொல்கத்தா, 5 முறை சாம்பியன் சென்னை ஆகிய இரு அணிகளை வீழ்த்தியிருக்கிறது.
இந்த வெற்றிகளில் அந்த அணியின் பௌலா்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜாஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
குஜராத் டைட்டன்ஸ் : சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் தெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.
சின்னசாமி திடல் என்றாலே அதிக ரன்கள் வருமென்பதால் இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.