நித்தியானந்தா: பழங்குடிகளின் நிலம் பறிப்பா? பொலிவியாவில் 20 கைலாசாவாசிகள் நாடு கடத்தல்; பின்னணி?
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்ற தகவல் உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால், அவரது சமூக வலைத்தள பக்கங்களில் மட்டும் பதிவுகள், போட்டோக்கள், வீடியோக்கள் தினமும் பதிவாகி வருகின்றன.இந்நிலையில், 2019-ம் ஆண்டுதான் 'கைலாசா' என்ற தனிநாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் தங்களது நாட்டில் கைலாசாவைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டதாகப் பொலிவியா அரசு கூறியது.
ஏன் கைது?
இதுகுறித்து கூறிய அந்நாட்டு அதிகாரிகள், "பொலிவியா நாட்டுப் பழங்குடியினரின் நிலங்களைப் பறிக்க முயன்றதற்காக கைலாசா நாட்டுடன் தொடர்புடைய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பழங்குடியினரிடம் 1000 ஆண்டுகளுக்கான லீஸ் ஒப்பந்தத்தைப் போட முயன்றனர்" என்று கூறியிருந்தனர்.
சம்பந்தம் இல்லை
கைது செய்யப்பட்ட இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தல் என்றால் அவர்கள் கைலாசாவிற்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த 20 பேர் எந்த நாட்டின் குடியுரிமை வைத்திருக்கிறார்களோ, அந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தற்போது பொலிவியாவின் வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "பொலிவியாவிற்கும், கைலாசாவிற்கும் எந்த உறவும் இல்லை" என்று கூறியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs