செய்திகள் :

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

post image

தவெக தலைவர் விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவா் விஜய் 2026 சட்டப்பேரவை தோ்தலை மையமாகக் கொண்டு தோ்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

தோ்தலை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களுக்கு அவா் பயணம் செய்யவுள்ளாா்.

இதனிடையே, விஜய்க்கு பல்வேறு அச்சுறுத்தல் எழுந்த நிலையில், அவரின் பாதுகாப்பு கருதி ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த நிலையில் விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது.

இதன்படி, 8 முதல் 11 மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை வீரா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

பாஜக தலைவர் போட்டியில் நான் இல்லை! - அண்ணாமலை

நாட்டில் உள்ள அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்ட முக்கிய நபா்களுக்கு அச்சுறுத்தல் தொடா்பான உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ஏப். 17-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஏப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏப். 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது.தமிழக அம... மேலும் பார்க்க

பென்சில் கேட்டதால்தான் அரிவாள் வெட்டு: காவல் துறை தகவல்!

இரு மாணவர்களுக்கு இடையேயான மோதல் விவகாரத்தில் பென்சில் கேட்டதால்தான் அரிவாள் வெட்டுக்குக் காரணம் என்று பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் பயிலும் ... மேலும் பார்க்க

பகுஜன் சமாஜ் கட்சிப் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து, கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஏப்ரல் 14ஆம... மேலும் பார்க்க

ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 17 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் ம... மேலும் பார்க்க

ஆளுநரை சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்!

தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வனத்துறை அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி ஆளுநர் ஆர். என். ரவியை தமி... மேலும் பார்க்க

பாமக உள்கட்சி பூசல் சரியாகிவிட்டது: ஜி.கே. மணி

பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், அக்க... மேலும் பார்க்க