செய்திகள் :

குட் பேட் அக்லியில் அஜித்துக்கு மகனாக நடிக்க வேண்டியது யார் தெரியுமா?

post image

குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக பிரபல இளம் நடிகர் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் முதல் மூன்று நாள்களில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இதில், அஜித்துடன் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சிம்ரன் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, இளையராஜாவின் ’ஒத்த ரூபாயும் தாரேன்’ பாடலுக்கு பலரும் உற்சாகமாக நடனமாடி வருகின்றனர்.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகனாக கார்த்திகேயா என்பவர் நடித்திருந்தார். இவர் கேஜிஎஃப், எம்புரான் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.

ஆனால், அஜித்தின் மகனாக முதலில் நடிக்க தேர்வுசெய்யப்பட்டவர் பிரபல மலையாள நடிகர் நஸ்லன். இதுகுறித்து பேசிய நஸ்லன், “நடிகர் அஜித்துக்கு மகனாக நடிக்க வேண்டும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னைத் தொடர்புகொண்டார். என் திரைவாழ்வில் மிகப்பெரிய வாய்ப்பு அது. ஆனால், அப்போது ஆழப்புழா ஜிம்கானா படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன்.

நஸ்லன்

குட் பேட் அக்லியிலும் எனக்கான காட்சிகள் அதிகம் இருப்பதால் படப்பிடிப்புக்காக நீண்ட நாள்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், குட் பேட் அக்லி படத்தில் நடிக்க முடியவில்லை. இது வருத்தமாகத்தான் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாராட்டுகளைப் பெறும் கோர்ட்!

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எம்புரான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சன... மேலும் பார்க்க

சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு!

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவே... மேலும் பார்க்க

சூரியின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை படத்திற்குப் பிறகு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் சூரி. அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் அமீத் கோலானி இயக்கத்தில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் உள்ளிட்டோர் நடித்து வெளியான லாக் அவுட் திரைப்படம் ஜ... மேலும் பார்க்க