ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையிலடைக்கும்: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து
பகுஜன் சமாஜ் கட்சிப் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து, கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஏப்ரல் 14ஆம் தேதி, அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில், கட்சித் தலைவர் பி. ஆனந்தனின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின்கீழ், கட்சி தொடர்ந்து வளர்ச்சி மற்றும் உறுதிபெறும். முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு வலியுறுத்தப்படும்.
மேலும், கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதயின் வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கப்படுகிறார். அவர் தன்னுடைய குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையிலும் அவர் கவனம் செலுத்துவார். அவர் கட்சிப் பணி எதிலும் தலையிட மாட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் அவருக்குப் பதிலாகக் கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வார். பகுஜன் சமாஜ் கட்சி, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு தங்களது முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.