செய்திகள் :

Travel Contest: 'கம்பீரமான ஜார்வா பழங்குடிகள்; அதிசயமான மண் எரிமலைகள்' - அந்தமான் சுற்றுலா பாகம் 2

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

Travel Contest: மனதைக் கனமாக்கிய 'காலா பாணி' சிறை - ஒரு விரிவான அந்தமான் சுற்றுலா அனுபவம் - பாகம் 1

உறக்கம் கலைந்து இரண்டாம் நாள் அனுபவத்துக்குத் தயார் ஆனோம்.

அந்தமான் தீவுகள், பரந்த தீவுக் கூட்டங்களாய் இருந்தாலும் அந்த தீவுகளில் மலைகளும் அதிகம்.

இரண்டாம் நாள் நாங்கள் பாராடாங் தீவுகள் அடைய மலைப்பாதையிலேயே செல்ல வேண்டி இருந்தது.

பாராடாங் தீவுகள் செல்ல ஹோட்டலில் இருந்து கிளம்பி ஜிர்காடாங் எனும் இடத்தை, நாம் சாலை மூலம் ஒன்றரை மணி நேரப் பயணத்தின் பின் அடைய வேண்டும்.

ஜிர்காடாங்கில் அந்தமான் மாமா என்று அழைக்கப்படும் தமிழர் ஒருவர் நடத்தும் ஹோட்டலில் இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா அனைத்தும் சகாய விலையில் கிடைக்கின்றன.

இருந்தாலும் தரம் வேண்டுவோர் காலை ஹோட்டலில் இருந்து கிளம்பும் பொழுதே கைவசம் காலை உணவு கொண்டு செல்வது நல்லது.

இந்த ஜிர்காடாங் அடைய ஷ்ரீ விஜயபுரத்தில் இருந்து இரு நேரங்களில் மோட்டார் கார்கள் கிளம்புகின்றன. காலை மூன்று மணிக்கும் அடுத்தது காலை ஆறு மணிக்கும்.

இவை ஜிர்காடாங்கில் கான்வாய்களாக மிடில் ஸ்ட்ரெய்ட் எனும் இடம் வரை ஒன்றன்பின் ஒன்றாகத் தொகுப்பாக அனுப்பப்படுகின்றன.

இந்த தொகுப்பு ஊர்வலம் காலை ஆறு மணிக்கும் அடுத்தது காலை ஒன்பது மணிக்கும் கிளம்புகிறது.

ஒவ்வொரு கான்வாய் தொகுப்பிலும் குறைந்தது 150 முதல் 200 வண்டிகள் செல்கின்றன.

இந்த தொகுப்பு வண்டிகள் செல்லும் பாதையில்தான் பாதுகாக்கப்பட்ட அந்தமான் பழங்குடியினர் ஜார்வா மக்கள் இருக்கின்றனர்.

இவர்கள் ஆப்ரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று நம்பப்படுகிறது.

இயற்கையோடு வாழும் ஜார்வா மக்கள், அந்தமான் செல்வோர் பார்க்க வேண்டிய இன்னொரு சுற்றுப்பயண ஈர்ப்பு ஆகும்.

இந்த பயணத்தின் பொழுது தேக்கடி செல்வோர் வனவிலங்குகள் காணச் செல்லும் படகுப் பயணம் உங்கள் நினைவில் வரலாம்.

நாம் ஜிர்காடாங்கில் இருந்து கான்வாய் தொகுப்பில் செல்லும் பொழுது நாம் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவை பற்றிய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கான்வாய் தொகுப்பு புறப்படும் முன் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இவை அறிவிக்கப்படுகின்றன.

  • ஜார்வா மக்களை நாம் வண்டியில் ஏற்றக்கூடாது.

  • ஜார்வாக்களுக்கு உணவோ, உடையோ அளிக்கக்கூடாது.

  • ஜார்வாக்களைப் புகைப்படம் எடுக்கக்கூடாது.

  • வண்டிகளைக் குறிப்பிட்ட மலைப்பகுதியில் நிறுத்தக்கூடாது.

  • மேலே குறிப்பிடப்பட்டவை நாம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் சில.

ஜார்வா மக்கள் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து வருகின்றனர். இன்றும் வில் அம்பு கொண்டோ அல்லது ஈட்டிக் கொண்டோ வேட்டையாடியே உணவு உண்கின்றனர்.

ஜார்வா மக்களின் முன்னேற்றத்துக்கு அந்தமான் – நிக்கோபார் நிர்வாகம் ஒரு தனித் துறையையே அமைத்துள்ளது.

அத்துறை ஜார்வாக்களின் மருத்துவத் தேவைகளை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே சென்று கவனித்து வருகிறது. மேலும் வாய்மொழி வழியாக இந்தியும் கற்பிக்க வசதி செய்துள்ளது.

ஜார்வாக்கள் அன்றி நிக்கொபாரி, ஊங்கி போன்ற வேறு சில பழங்குடியினரும் அந்தமானில் காணப்பட்டாலும் அவர்கள் நாகரீகம் அடைந்து பொதுமக்களுடன் கலந்து விட்டனர்.

இன்னும் சில வருடங்கள் கழிந்தால் ஜார்வாக்களும் நாகரீகம் பெற்றுவிடுவார்களோ, என்னவோ என்று எண்ணிக் கொண்டே மிடில் ஸ்ட்ரெயிட் நோக்கிப் பயணித்தோம்.

ஜார்வாக்களைப் பற்றிச் சொல்லும்பொழுது சென்ட்டினல் தீவுகளில் வசிக்கும் சென்ட்டினல் பழங்குடியினர் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சென்ட்டினல் பழங்குடியினர் முற்றிலும் பொது மக்களுடன் தொடர்பு இல்லாதவர்கள். எனவே சென்ட்டினல் தீவுகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

நாங்கள் இரண்டாம் தொகுதியில் சென்றதால், ஜார்வாக்கள் வசித்த பகுதி கடந்த பொழுது காலை பத்து மணியாகி இருந்தது. சூரியன் உச்சியிலிருந்ததால் போகும் வழியில் ஜார்வாக்கள் யாரையும் பார்க்க முடியவில்லை.

ஆறுதலுக்கு வண்டி ஓட்டுநர் ஒரு இடம் நெருங்கும் பொழுது எங்களுக்கு ஜார்வாக்கள் குடி இருக்கும் குடிசைகள் சிலவற்றைக் காட்டினார்.

நான்கு குச்சிகள் நட்டு பனஞ்செடிகளின் காய்ந்த இலைகள் கூரைகளாகப் போடப்பட்டு அவை இருந்தன.

மிடில் ஸ்ட்ரெயிட்டில் இருந்து பாராடாங் தீவுகள் செல்லும் வழியில் ஃபெர்ரி மூலம் போக வேண்டும்.

ஃபெர்ரியில் நம்முடன் மோட்டார் கார்களும் லாரிகளும் கூட பயணிக்கும். பாராடாங் அடைந்ததும் இயற்கை அமைத்துக் கொடுத்த சுண்ணாம்புக்கல் குகைகள் காண ஃபைபர் படகுகளில் – பிச்சாவரத்தில் காண்பது போன்ற – சதுப்பு நிலக் காடுகள் கடந்து அடையவேண்டும்.

ஒவ்வொரு ஃபைபர் படகிலும் 10 பேர் செல்ல முடியும். அப்படி சென்றால்தான் ஃபைபர் படகு ஓட்டுநருக்குக் கட்டுப்படியாகும். நமக்கும் கட்டுபடியாகும். தலைக்கு 900 ரூபாய் வசூலிக்கிறார்கள்.

ஜிர்காடாங்கில் கான்வாய் தொகுப்புக்குக் காத்திருக்கும் பொழுதே வண்டி ஓட்டுநர்கள் பத்து பேர் கொண்ட குழு அமைத்துக் கொடுப்பார்கள்.

ஜிர்காடாங் விட்டு ஒரு மணி நேர மலைப்பாதை பயணம் கடந்த பின் மிடில் ஸ்ட்ரெயிட் அடைந்தோம்.

மிடில் ஸ்ட்ரெயிட்டில் ஃபைபர் படகு பிடித்து பாராடாங் தீவுகள் அடையலாம். உங்களுக்கு நீச்சல் தெரிந்தால் சரி, இல்லையேல் கொடுக்கப்படும் லைஃப் ஜாக்கெட்டுகளை சர்வ மரியாதையுடன் அணிந்து கொள்வது நலம்.

சதுப்பு நிலக்காடுகள் வழியாகச் சுண்ணாம்புக்கல் குகைகள் காணும் வழி அடைந்தோம்.

ஒரு கிலோ மீட்டர் கரடுமுரடான காட்டுப்பாதையில் நடந்து, சரியாகச் சொல்வதென்றால் 1.2 கி. மீ நடந்து சுண்ணாம்புக்கல் குகைகள் அடையலாம்.

மூச்சை எடுப்பதாக இருந்தது. Breath taking என்ற வார்த்தையின் தமிழாக்கம்.

நேரில் பார்த்தால்தான் அந்த அனுபவத்தை உணர முடியும். அங்கு அமைந்துள்ள உருவங்களை நாம் மனதில் என்ன எண்ணிப் பார்க்கிறோமோ அவை போலவே காண்கிறோம்.

திரும்பும் வழியில் பாராடாங் தீவுகள் விடும் முன் மண் எரிமலைகள் பார்த்தோம். மண் எரிமலைகள் இயற்கை அதிசயங்களாய் இருக்கின்றன. இந்த மண் எரிமலைகளில் லாவாவாக மண்ணாலே உமிழப்படுகிறது.

பின்னர் மீண்டும் ஃபெர்ரி ஏறி மிடில் ஸ்ட்ரெயிட் அடைந்தோம்.

ஜிர்காடாங் வரும் வழியில் ஜார்வாக்களைப் பார்க்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே வந்தோம்.

ஒரு இடத்தில் வண்டி ஓட்டினர், ”ஜார்வா... ஜார்வா...” என்று கத்தினார்.

மூன்று ஜார்வாக்கள் கருப்பு நிற மேனியுடன் சாலை ஓரம் அவர்கள் பாரம்பர்ய உடையில் நின்று கொண்டிருந்தார்கள். பார்க்கவே கம்பீரமாக இருந்தனர்.

சுண்ணாம்புக்கல் குகைகள், மண் எரிமலைகள் எவ்வாறு பார்வையாளரை ஈர்த்தனவோ அதே போல் ஜார்வாக்கள் பார்த்ததும் ஒரு திருப்தி அளித்தது.

இன்னும் சற்று தூரத்தில் ஐந்தாறு ஜார்வா சிறுவர்களைச் சாலையோரம் பார்த்தோம். கான்வாய் கடப்பதற்காக அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஜார்வாக்களைப் பார்த்தது ஒரு அருமையான அனுபவம்.

ஹோட்டல் திரும்பி இரவு உணவுடன் இரண்டாம் நாளை முடித்துக் கொண்டோம்.

பயணம் தொடரும்

அன்புடன்

எஃப்.எம்.போனோ

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest: 'ஒரு கருப்பு முட்டை சாப்பிட்டா 7 வருட ஆயுள் கூடுமா?' - அதிசயமான ஜப்பான் எரிமலை பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவான தேனிலவுப் பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: 'உப்புச் சுரங்கம்; சாகச தீம் பார்க்; விமான மியூசியம்' - பிரமிப்பான போலாந்து சுற்றுலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பனங்கிழங்கை பார்த்து பதறிய அதிகாரி! - சவுதி பயண அனுபவம் | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: Cruise கப்பலில் மூன்று நாள் கடல் உலா; ஆடம்பரமான பஹாமாஸ் கடல் சுற்றுலா அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: "வண்டிய நிறுத்துங்க; பயப்படாதீங்க’’ - பதைபதைக்க வைத்த பரம்பிக்குளம் சுற்றுலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க