ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையிலடைக்கும்: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து
சீனாவில் காட்டுத் தீ: 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வடக்குப் பகுதியில் ஹூகான் கவுன்டியில் உள்ள காடுகளில் கடந்த சனியன்று (ஏப். 12) காட்டுத் தீ ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக இது சாங்ஷி மாகாண காடுகள் வரை பரவியுள்ளது.
காட்டுத் தீயை அணைக்க 5 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்தக் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 266 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பலத்த காற்று, சிக்கலான நிலப்பரப்பு, அடர்த்தியான தீ பரவுதல் ஆகிய காரணங்களால் காட்டுத் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.