ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையிலடைக்கும்: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து
ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிப்பு!
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி, தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. சிஎஸ்கே தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறை.
இதையும் படிக்க: என்னுடைய வேலையை எளிதாக்கிய எம்.எஸ்.தோனி; மனம் திறந்த ஷிவம் துபே!
தொடர்ச்சியான தோல்விகள் மட்டுமின்றி, காயம் காரணமாக சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிஎஸ்கேவை மீண்டும் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
மாற்று வீரர் அறிவிப்பு
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக சிஎஸ்கேவில் ஆயுஷ் மாத்ரே மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
17 வயதாகும் ஆயுஷ் மாத்ரே இதுவரை 9 முதல் தர போட்டிகளிலும், 7 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். வலது கை தொடக்க ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
LION ALERT ‼️
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2025
Mumbai youngster Ayush Mhatre drafted as a replacement for Ruturaj Gaikwad who had suffered an elbow fracture earlier. #WhistlePodupic.twitter.com/PGMDH12J9q
நடப்பு ஐபிஎல் தொடரில் ரூ.30 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆயுஷ் மாத்ரே இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.