செய்திகள் :

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி - இதற்கு பின்னால் இவ்வளவு காரணம் இருக்கா?

post image

வீடுகளில் பெரும்பாலும் அரளிச் செடியை அதன் விஷத்தன்மை காரணமாக வளர்ப்பது இல்லை. ஆனால் நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதிகம் இருப்பதை பார்த்திருப்போம்.

பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் அதனை பராமரிப்பது குறைந்த செலவு என்பதாலும் இதனை நெடுஞ்சாலைகளில் வைப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்குப் பின் அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. அது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

நெடுஞ்சாலைகளில் எதற்காக அரளிச்செடி அதிகமாக வளர்க்கப்படுகிறது?

வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுக்கள் அதிகமாக இருக்கும். இந்த நச்சுக்கள் காற்றில் கலந்து சாலையில் பயணிப்பதற்கு சுவாசக் கோளாறு ஏற்படுத்தக் கூடும்.

ஆனால் செவ்வரளி செடியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள், கார்பன் துகள்களை காற்றில் இருந்து நீக்கி காற்றில் உள்ள மாசுகளை அகற்றும் தன்மை கொண்டவை.

அதுமட்டுமில்லாமல் இவை வறட்சியை தாங்கும் தன்மை கொண்டவை. சத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டவை, இவ்வளவு ஏன் எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் எதிர்புற வாகன ஓட்டிகளின் மீது படாமல் தடுக்கின்றன, அந்த அளவுக்கு இலைகள் அடர்த்தி மிக்கவை.

சாலைகளில் செடிகள் இருந்தால் அதனை விலங்குகள் தீண்டும். ஆனால் விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் இலைகளை சாப்பிடாது என்பதும் மற்றொரு காரணம்.

நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் அரளிச் செடிகள் மழை அதிகமான காலங்களில் அதிகமாக வளரும். அப்படி வளரும் பட்சத்தில் விபத்துகள் நேரலாம். அதனால்தான் சாலையின் நடுவில் செடிகள் குறைந்த அளவு உயரமாக வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பராமரிப்பது குறைந்த செலவு தான் என்றாலும் சரியாக அதனை செய்ய வேண்டும்.

இந்த செவ்வரளி எல்லா பருவநிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக்கூடியது. அழகோடு சேர்த்து இத்தனை அறவியல் காரணங்கள் இருப்பதால் செவ்வரளியை நெடுஞ்சாலையில் அதிகம் காண முடிகிறது.

`இது புகையல்ல...' - விமானங்களுக்குப் பின்னால் வெள்ளை நிற கோடுகள் எப்படி உருவாகின்றன தெரியுமா?

வானத்தில் விமானங்கள் பறந்து செல்லும்போது அதற்கு பின்னால் வெள்ளை கோடுகள் தோன்றும், அதனை பலரும் விமானத்திலிருந்து வரும் புகை என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மையில் புகையல்ல...பொதுவாக ஜெட் விமானங்கள... மேலும் பார்க்க

விமானத்தின் ஜன்னலில் இருக்கும் சிறிய துளை; எதற்காக இருக்கிறது தெரியுமா? - அறிவியல் காரணம் இதுதான்!

விமானத்தின் ஜன்னலில் ஒரு சிறிய துளை இருக்கும். இதற்கு பின்னால் இவ்வளவு பாதுகாப்பு காரணங்கள் இருக்கின்றன என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.ஒரு விமானம் புறப்பட்டு உயரத்தில் பறக்கும் போது காற்றின் அழ... மேலும் பார்க்க

மனிதர்களுக்கு முன்பே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 'லைக்கா' என்ற நாய் - பயணம் எப்படி இருந்திருக்கும்?

1957ஆம் ஆண்டு பூமியிலிருந்து முதல் உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ஒன்றியம். லைக்கா என்ற பெண் நாயை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தனர். அமெரிக்கர்கள் குரங்கு மற்றும் சிம்பான்சிகளை அனுப்ப பர... மேலும் பார்க்க

எந்திரா... Sci fic படங்களின் தாக்கம்; ரோபோவை துணையாகதேர்ந்தெடுத்த சீன நபர் -ஒரு நாள் வாடகை தெரியுமா?

சினிமா எப்போதும் பலருக்கு நிதர்சன வாழ்க்கையில் அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியான கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால், சீனாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் சினிமாவின் தாக்கத்தால் செய்த ஒரு செயல் பல... மேலும் பார்க்க

விமானப் பயணத்தில் `பவர் பேங்க்' எடுத்துச் செல்ல தடை ஏன் தெரியுமா?

ஏர்லைஸ் நிறுவனங்கள் விமானத்தில் பயணிகள் பயணிப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பல பொருள்களை பயணிகள் எடுத்துச்செல்லவும் தடைவிதிக்கிறது, லைட்டர்கள், செல் பேட்டரிகள் போன்ற எளிதில் எரியக்கூடிய... மேலும் பார்க்க

Sunita Williams: "துணிச்சலால் உருவானவர் சுனிதா வில்லியம்ஸ்" - நினைவுகளைப் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா

மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா இன்று, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது மிகப்பெரிய நிம்மதி எனத் தெரிவித்துள்ளார். விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் உடன் எடுத்துக்கொண்ட பழைய புகை... மேலும் பார்க்க