செய்திகள் :

மனிதர்களுக்கு முன்பே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 'லைக்கா' என்ற நாய் - பயணம் எப்படி இருந்திருக்கும்?

post image

1957ஆம் ஆண்டு பூமியிலிருந்து முதல் உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ஒன்றியம். லைக்கா என்ற பெண் நாயை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

அமெரிக்கர்கள் குரங்கு மற்றும் சிம்பான்சிகளை அனுப்ப பரிசோதித்தபோது ரஷ்யர்கள் நாய்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

அதற்கு காரணம் நாய்கள் மனிதர்களைப் போலவே பிணைப்புகளை கொண்டிருக்கும். அவைகளுக்கு பயிற்சி அளிப்பதும் எளிது என்பதால் நாய்களை அனுப்ப முடிவு செய்தனர்.

space

அதிலும் குறிப்பாக தெரு நாயை தேர்ந்தெடுத்தனர். அவை பிறப்பிலிருந்து வாழ்வாதாரத்திற்காக போராடும் என்பதால் விண்வெளிக்கு அவை பொருத்தமாக இருக்கும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் நம்பினர்.

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விண்வெளி உடையுடன் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் தனியாக விண்வெளிக்குச் சென்றது லைக்கா.

விண்வெளியில் லைக்காவின் உடலை கண்காணிக்க அதன் உடலின் முக்கிய நரம்புடன் ஒரு டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டது. சுவாசிக்க ஆக்சிஜன் வழங்கப்பட்டது. கழிவுகளை சேகரிக்க ஒரு பையும் பொருத்தப்பட்டிருந்தது, உணவும் தண்ணீரும் ஜல்லி வடிவில் வைக்கப்பட்டிருந்தது.

சோவியத் அதிபர் ஒரு மாதத்திற்குள் ஒரு நாயை விண்வெளிக்கு அனுப்ப உத்தரவிட்டதை தொடர்ந்து, குறித்த நேரத்திற்குள் அனுப்ப வேண்டும் என்ற அவசரத்தில், லைக்காவை எப்படி உயிருடன் பூமிக்கு திரும்பி கொண்டு வர வேண்டும் என்று யாரும் யோசிக்கவில்லை.

எதிர்பார்த்தபடி விண்கலம் பூமியின் சுற்றுப் பாதையில் நுழைந்தது. நாசா கூற்றுப்படி, ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் சுமார் 10 நாள்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. ஆனாலும் ஒரு வாரத்தில் லைக்கா விண்கலத்தில் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

லைக்கா விண்வெளியில் ஏழு மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்ந்ததாகவும், பயம் மற்றும் வெப்பம் காரணமாக இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட லைக்கா ஒரு தேசிய வீராங்கனையாக மாறியது. லைக்காவின் நினைவாக சிறப்பு தபால் ஸ்டாம்புகள் மற்றும் கவர்கள் வெளியிடப்பட்டன. அந்தக் காலத்தில் லைக்கா என்ற பெயர் பிரபலமாக இருந்திருக்கிறது.

விண்வெளிக்கு சென்ற முதல் நட்சத்திரம் என்ற அடையாளத்தை லைக்கா பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

எந்திரா... Sci fic படங்களின் தாக்கம்; ரோபோவை துணையாகதேர்ந்தெடுத்த சீன நபர் -ஒரு நாள் வாடகை தெரியுமா?

சினிமா எப்போதும் பலருக்கு நிதர்சன வாழ்க்கையில் அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியான கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால், சீனாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் சினிமாவின் தாக்கத்தால் செய்த ஒரு செயல் பல... மேலும் பார்க்க

விமானப் பயணத்தில் `பவர் பேங்க்' எடுத்துச் செல்ல தடை ஏன் தெரியுமா?

ஏர்லைஸ் நிறுவனங்கள் விமானத்தில் பயணிகள் பயணிப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பல பொருள்களை பயணிகள் எடுத்துச்செல்லவும் தடைவிதிக்கிறது, லைட்டர்கள், செல் பேட்டரிகள் போன்ற எளிதில் எரியக்கூடிய... மேலும் பார்க்க

Sunita Williams: "துணிச்சலால் உருவானவர் சுனிதா வில்லியம்ஸ்" - நினைவுகளைப் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா

மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா இன்று, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது மிகப்பெரிய நிம்மதி எனத் தெரிவித்துள்ளார். விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் உடன் எடுத்துக்கொண்ட பழைய புகை... மேலும் பார்க்க

Sunita Williams: பூமிக்கு திரும்பிய வீரர்களை வரவேற்ற திமிங்கலங்கள்!; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

9 மாதங்களுக்குப் பிறகு பூமியில் கால் பதித்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்பட நால்வரை அழைத்து வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்க... மேலும் பார்க்க

"4 ஆண்டுகளில் இந்திய விஞ்ஞானிகள் விண்வெளியில் தங்குவார்கள்" - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவால் கல்வியில் மாற்றம் ஏற்படும். செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்... மேலும் பார்க்க

FireSat satellite: எலான் மஸ்க்குக்கு நன்றி கூறிய சுந்தர் பிச்சை; என்ன காரணம்?

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் காட்டுத்தீயைக் கண்டறிந்து, கண்காணிக்க 50 -க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது. அதில் முதல் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. கல... மேலும் பார்க்க