Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
FireSat satellite: எலான் மஸ்க்குக்கு நன்றி கூறிய சுந்தர் பிச்சை; என்ன காரணம்?
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் காட்டுத்தீயைக் கண்டறிந்து, கண்காணிக்க 50 -க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது. அதில் முதல் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸின் டிரான்ஸ்போர்ட்டர்-13 மிஷன் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோள், உலகளவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் உயர் தெளிவுத்திறனுடன் படங்களை அனுப்பும். அதன் மூலம் காட்டுத்தீ மேலாண்மையை சிறப்பாக கையாள்வதே இதன் நோக்கமாகும்.

இது தொடர்பாக Google CEO சுந்தர்பிச்சை பகிர்ந்திருக்கும் செய்தியில், `` இந்த வார இறுதியில் வெற்றிகரமாக ஏவப்பட்ட AI - FireSat செயற்கைகோள் இப்போது பூமியைச் சுற்றி வருகிறது. AI ஐப் பயன்படுத்தி, 5x5 மீட்டர் அளவுள்ள 50-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள், காட்டுத்தீயைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டிருக்கிறது. செயற்கைக்கோள்கள் தொகுப்பில் இந்த செயற்கைக்கோள் முதன்மையானது. Muon Space, Earth Fire Alliance, Moore Foundation ஆகியவற்றுடன் இணைந்து, FireSat செயற்கைகோளை சுற்றுப்பாதைக்கு கொண்டு சென்ற SpaceX உள்ளிட்ட அனைத்து நிறுவனத்துக்கும் நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks