குழந்தைகளுக்கு தலையில் இரட்டை சுழி இருந்தால் இதுதான் அர்த்தமா? அறிவியல் சொல்வதென்ன?
பொதுவாக மனிதர்களின் தலையில் ஒற்றை சுழி, இரட்டை சுழி என இருக்கும். இவ்வாறு இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்கும், அதிக சேட்டை செய்வார்கள் என்றெல்லாம் கிராமப்புறங்களில் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு தலையில் இரட்டை சுழி இருப்பது சாதாரணமான ஒன்றுதான். ஒன்று அல்லது இரண்டு சுழிகள் இருப்பதை பார்த்திருப்போம் அதற்கு மேல் போனால் அரிதாகவே காணப்படுகிறது. NHGRI ஆய்வுப்படி உலக மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரட்டை சுழி இருக்கும், மீதி 95 சதவீதம் பேருக்கு ஒற்றை சுழி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அறிவியல் காரணம்
அறிவியலின்படி ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் அதற்கு மிக முக்கிய காரணம் மரபணு. அந்த இரட்டை சுழி இருக்கும் நபர்களின் தாத்தா, பாட்டி என முன்னோர்களுக்கு இப்படி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி இருக்க வாய்ப்புள்ளது என்கிறது அறிவியல்.
கரு வளர்ச்சியின் போது, முடி வளர்ச்சியின் முறையை சார்ந்தும் இந்த சுழிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியல் கூறுகிறது.
"இரட்டை சுழியுடன் குழந்தை பிறந்தால் அவர்கள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள் எனவும் எதிர்காலத்தில் அவர்களின் உடன்பிறப்புகளின் பாலினத்தை இது கணிக்கும்" என்றும் சிலர் கூறுகின்றனர். இது அறிவியல் பூர்வமாக எங்கேயும் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs