ராசிபுரம் அண்ணா சாலை அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா நுழைவாயில் திறப்பு: அமைச்சா், ...
Asteroid: 2032-ல் பூமியில் மோதும் சிறுகோள்; இந்தியாவை பாதிக்குமா? -வானியலாளர்கள் சொல்வதென்ன?
"சமீபத்தில் கண்டறியப்பட்ட 60 மீட்டர் அகலமானதாக இருக்கும் சிறுகோள் (Asteroid) 2024 YR4, இன்னும் எட்டு ஆண்டுகளில் பூமிக்கு மிக நெருக்கமாக வரவுள்ளது. இது பூமி மீது மோதவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது" என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.
2032ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி, இந்த சிறுகோள் பூமி மீது மோதுவதற்கான வாய்ப்பு விகிதம் 1/83 என கணித்துள்ளனர்.
முதல் கட்ட அவதானிப்புகள்!
நாசாவால் அமைக்கப்பட்ட ஹவாய் பல்கலைக்கழக சிறுகோள் தாக்க முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பான ATLAS புராஜெக்டில் இந்த சிறுகோள் கண்டறியப்பட்டுள்ளது.
இப்போது பூமியில் இருந்து 43 மில்லியன் கிலோமீட்ட தொலைவில் இருக்கும் 2024 YR4 சிறுகோள் குறிப்பிட்ட தேதியில் பூமிக்கு மிக அருகாமையை வந்தடையும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த கோள் பூமியின் மீது மோதினால் வளி மண்டலத்தில் வெடிப்பை ஏற்படுத்தும் அல்லது பூமியில் பெரும் பள்ளத்தை ஏற்படுத்தலாம். இந்த சிறுகோளின் தன்மையைப் புரிந்துகொள்ளவும் அதன் பாதையை நிச்சயமாக தெரிந்துகொள்ளவும் அதைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இப்போதைய அவதானிப்புகள் எல்லாம் முதல் கட்ட கவனிப்பில் இருந்தே சொல்லப்பட்டுள்ளன. இந்த சிறுகோளின் சுற்றுவட்டப்பாதை இன்னும் முழுமையாக தெரியவரவில்லை. முழுமையான ஆய்வுகள் நடைபெற்று இந்த கோள் குறித்த அனைத்து மர்மங்களும் விலகும்போது பாதிப்பு குறைவாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக என்ன சேதம் ஏற்படலாம்?
இதனால் மிக மிக மோசமான தாக்கம் ஏற்படுமானால், இது பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியாவின் மும்பை, சில ஆப்ரிக்க நாடுகள் அல்லது அரேபிய தீபகற்பம் போன்ற மக்கள் தொகை அடர்ந்த பகுதியில் விழலாம் என்கின்றனர். ஒருவேளை அது அட்லாண்டிக் கடலில் விழுந்தால் வெனிசுலா, கொலம்பியா போன்ற நாடுகள் பாதுப்பைச் சந்திக்கும் என்று கூறுகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY