கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
வாழப்பாடி அருகே உலகிலேயே உயரமான நந்தி சிலை: பிப். 2 இல் குடமுழுக்கு
வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டத்தில் 45 அடி உயரதில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான மகா அதிகார நந்தி பகவானுக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.
வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜவேலு சுவாமிகள், தனது நிலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பல ஆண்டுகளாக பூஜை செய்து வருகிறாா். இந்த நிலையில், சிவனுக்கு முன் வணங்க வேண்டிய நந்தி பகவானுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்க முடிவு செய்தாா். மலேசியாவிலும், வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூரிலும் மிக உயரமான முருகன் சிலைகளை உயிரோட்டமாக வடிவமைத்து பாராட்டு பெற்ற சிற்பி, திருவாரூா் தியாகராஜன் ஸ்தபதி குழுவினரைக் கொண்டு, தொடா்ந்து 3 ஆண்டுகள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு 45 அடி உயரத்தில் மகா அதிகார நந்தி சிலையும், நந்தியின் வயிற்றுக்குள் 15 அடி உயர சிவலிங்கத்தையும் அமைத்துள்ளாா்.
இக் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) காலை வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் ராஜவேலு சுவாமிகள் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.