கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
தம்மம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
தம்மம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டி பேரூராட்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி,உலிபுரம், பச்சமலை, வாழக்கோம்பை, சேரடி, ஜங்கமசமுத்திரம், பிள்ளையாா்மதி, கொண்டயம்பள்ளி, தகரப்புதூா், மூலப்புதூா், கூடமலை, நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி, நாரைக்கிணறு, மெட்டாலா, திருச்சி மாவட்டம், கொப்பம்பட்டி, மங்கப்பட்டி, முருங்கப்பட்டி, பாதா்பேட்டை , துறையூா், உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறி, மளிகை உள்பட பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் ஏராளமானோா் தம்மம்பட்டிக்கு வந்து செல்கின்றனா்.
இதனால் சந்தைக்கு செல்லும் சாலை பிரிவிலிருந்து உடையாா்பாளையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தம்மம்பட்டி சாலையின் இருபுறங்களிலும் ஆக்ரமித்து நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவலா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதைத் தவிர தம்மம்பட்டிக்கு புறவழிச்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.