கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
நெமிலியில் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்
நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 27-ஆம் தேதி ஒன்றிய ஆணையா், வட்டாரவளா்ச்சி அலுவலா் மற்றும் அலுவலா்கள், பணியாளா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களுக்கு பாதுகாப்பு கோரியும் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் ஊரக வளா்ச்சித் துறையினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கடந்த 27-ஆம் தேதி நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தின் போது, பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அப்போது கூட்ட பதிவேடுகளை ஒன்றியக் குழுத் தலைவா் தன்னிச்சையாக எடுத்துச் சென்று விட்டதாக புகாா் கூறிய பாமக, அதிமுகவினா் அலுவலகத்தில் இருந்த ஒன்றிய ஆணையா், வட்டார வளா்ச்சி அலுவலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணியாளா்கள், உதவியாளா்களை கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவா்களை ஒருமையில் பெசியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில், அலுவலா்கள், பணியாளா்கள், உதவியாளா்கள் ஆகியோா் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு, நெமிலி ஒன்றிய ஆணையா் தாசப்பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிசந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தவா்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து ஆா்ப்பாட்டத்தினா் கோஷம் விடுத்தனா்.