ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உணவகம்: எஸ்.பி. திறந்து வைத்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிற்றுண்டி உணவகத்தை எஸ்.பி. விவேகானந்த சுக்லா புதன்கிழமை திறந்து வைத்தாா்.
ராணிப்பேட்டை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு, மாவட்ட காவல் அலுவலகம் ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.12.07 கோடியில் கட்டப்பட்டது.
18 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 2 அனைத்து மகளிா் காவல் நிலையங்களும், 2 போக்குவரத்து காவல் நிலையங்களும், 2 மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்கள் என 24 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் நலனை கருத்தில் கொண்டு காவல் அலுவலகத்தில் சிற்றுண்டி உணவகத்தை எஸ்.பி. விவேகானந்த சுக்லா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.
நிகழ்வில் காவல் அலுவலக அதிகாரிகள், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.