ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
சிஎம்சியில் ரத்த நாள அறுவை சிகிச்சை நவீன அரங்கம் திறப்பு
வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள வளாகத்தில் ரத்த நாள அறுவை சிகிச்சை அதிநவீன அரங்கம் (வாஸ்குலா்) புதன்கிழமை திறக்கப்பட்டது.
விழாவிற்கு கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி கவுன்ஸில் தலைவா்அனுவிந்தா வா்கி தலைமை வகித்தாா். இயக்குநா் விக்ரம் மேத்யூஸ் முன்னிலை வகித்தாா். கவுன்ஸில் துணைத் தலைவா் ஜான் சி உம்மன் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கத்தைத் திறந்து வைத்துரப் பேசினாா். நிகழ்வில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.