தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
பாலியல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கைது!
பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ஏமாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர், தன்னை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் ராகேஷ் மீது பெண் ஒருவர், ஜனவரி 17 ஆம் தேதியில் வழக்குப்பதிவு செய்தார். ராகேஷுடனான அழைப்பு விவரங்களையும் காவல் நிலையத்தில் பெண் சமர்ப்பித்தார்.
இதற்கிடையே, வழக்கில் முன்ஜாமீன்கோரி, ராகேஷ் மனு அளித்திருந்தார். இருப்பினும், ராகேஷின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ அமர்வு புதன்கிழமையில் நிராகரித்தது.
இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களுடன் ராகேஷ் பேசிக் கொண்டிருந்தபோது, அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே, செய்தியாளர்களிடையே ராகேஷ் ``நீதிமன்றத்திலும் மக்கள் நீதிமன்றத்திலும் எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த விவகாரம் நீதிமன்றத்தின்முன் உள்ளதால், தற்போது இதுகுறித்து பேசுவது சரியாக இருக்காது’’ என்று கூறினார்.
இதையும் படிக்க:பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் தேர்தல் அலுவலர்கள் சோதனை!
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் மீது பெண்ணின் கணவரும் ஜனவரி 22 ஆம் தேதியில் வழக்குப்பதிவு செய்தார். ராகேஷ் மீதான பாலியல் வழக்கை திரும்பப் பெற பெண்ணுக்கு ராகேஷ் மற்றும் அவரது மகன் அழுத்தம் கொடுத்ததாகவும், பெண் குறித்து உண்மையற்ற அவதூறான கருத்துகளை சமூக ஊடகங்களில் ராகேஷின் ஆதரவாளர்கள் தெரிவித்ததாகக் கூறி, 5 பேர் மீது பெண்ணின் கணவர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.