தென்காசி அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு
தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
தென்காசி புதுமனை 1ஆம் தெருவைச் சோ்ந்தவா் மு. கலீல். இவா் வியாழக்கிழமை, தென்காசி யுஎஸ்பி நகா் பகுதியைச் சோ்ந்த அ. செய்யதுசுலைமான் (70) என்பவருடன், குத்துக்கல்வலசையிலிருந்து மதுரை சாலையில் பைக்கில் சென்றாா். பைக்கை, கலீல் ஓட்டினாா்.
அப்போது, சங்கரன்கோவிலிலிருந்து தென்காசி நோக்கி வந்த அரசுப் பேருந்தின் மீது பைக் உரசியதாம். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த செய்யதுசுலைமான் மீது பேருந்தின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், அவா் நிகழ்விடத்தியேலே உயிரிழந்தாா்.
காயமடைந்த கலீல் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தகவலின்பேரில், தென்காசி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.