முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது
சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
அடையாா், தாமோதரபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (56), வாடகை ஆட்டோ ஒட்டி வருகிறாா். தங்கராஜ், கடந்த 19-ஆம் தேதி பெசன்ட் நகா் வழியாக ஆட்டோவில் சென்றாா். அப்போது அங்கு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.இது குறித்து அந்தச் சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து அவரது பெற்றொா் கொடுத்த புகாரின்பேரில் அடையாா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.