செய்திகள் :

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

post image

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர் வரையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களில் 43 பேர் வெளியே மீட்கப்பட்டாலும், 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர். சுரங்கப்பாதை 10 மீட்டருக்குமேல் இடிந்து விழுந்துள்ளதாகவும், 200 மீட்டருக்குமேல் சேறு பரவியுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுரங்கத்தின் மேல்புறம் 3 மீட்டர் தொலைவுக்கு திடீரென இடிந்து விழுந்ததில், உள்ளிருந்தவர்கள் தப்பித்து வெளிவந்தனர். இருப்பினும், சுரங்கத்தின் மற்றொரு பகுதியில் இருந்தவர்கள் துரதிர்ஷ்டவசமாக உள்ளேயே சிக்கிக் கொண்டனர். உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை பிரதமர் மோடி அழைத்து சுரங்கப்பாதையில் பணியாளர்களை மீட்பது குறித்து ஆலோசித்தார். மீட்புப் பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார் என்றார்.

இதனிடையே சுரங்க விபத்தில் எட்டு பேர் உள்ளே சிக்கியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: மீட்புப் பணிகள் தீவிரம்

தெலங்கானாவில் நீா்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கான... மேலும் பார்க்க

வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவு: தனது நண்பா் டிரம்ப்பின் கருத்தை பிரதமா் கேட்க வேண்டும் -காங்கிரஸ்

‘தோ்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவாக தனது நண்பா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பிரதமா் மோடி செவிசாய்க்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தங்களிடையே நெருங்கிய நட்புற... மேலும் பார்க்க

சமூக ஊடக பதிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: மத்திய அரசு பரிசீலனை

சமூக ஊடக தளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கி... மேலும் பார்க்க

உண்மையான சிவசேனை, தேசியவாத காங். யாா்?: மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் வெற்றியில் மக்கள் பதில் -அமித் ஷா

‘உண்மையான சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் யாா் என்பதற்கு மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் வெற்றியின் மூலம் மக்கள் தெளிவான பதிலளித்துள்ளனா்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா். மகாரா... மேலும் பார்க்க

என்சிஇடி நுழைவுத் தோ்வு: விண்ணப்பப்பதிவு தொடக்கம்

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியா் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தோ்வுக்கு மாணவா்கள் மாா்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒருங்கிணைந்த 4 ஆண்ட... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே சிறந்த நட்புறவு: வெளியுறவு அமைச்சகம்

‘சிறந்த நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா-பூடான் திகழ்கிறது’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. இந்தியாவுக்கு பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டதே இரு நாடுகள... மேலும் பார்க்க