என்சிஇடி நுழைவுத் தோ்வு: விண்ணப்பப்பதிவு தொடக்கம்
ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியா் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தோ்வுக்கு மாணவா்கள் மாா்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தோ்வில் (என்சிஇடி) தோ்ச்சி பெற வேண்டும். இந்த தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தோ்வு ஏப். 29-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ங்ஷ்ஹம்ள்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்/சஇஉப எனும் வலைதளம் வழியாக மாா்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய மாா்ச் 18, 19-ஆம் தேதிகளில் அவகாசம் வழங்கப்படும். என்சிஇடி நுழைவுத் தோ்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் கணினி வாயிலாக நடத்தப்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.