தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 2 போ் கைது
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், கருமாரம்பாளையம் பகுதியில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வடக்கு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் அந்தப் பகுதியில் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அவா்கள், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா்கள், வங்கதேசத்தைச் சோ்ந்த அப்துல் ஹுசைன் (45), இப்ராஹிம் (33) என்பது தெரியவந்தது.
இருவரும் உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் கடந்த 9 ஆண்டுகளாக தங்கி கருமாரம்பாளையத்தில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.