செங்குன்றம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!
செங்குன்றத்தில் கைப்பந்து விளையாடிய சிறுவன், மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் கங்கை அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள மைதானத்தில் சிறுவர்கள் சேர்ந்து கைப்பந்து விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக பந்து மின்மாற்றியில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து, சிறுவர்கள் சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் ஏறி, மின்மாற்றியில் சிக்கிய பந்தினை மீட்க முயற்சித்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பந்தை எடுக்க முயற்சித்த சிறுவர்கள் ஷியாம் (15) மற்றும் கணேஷ் (13) இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். மின்சாரம் தாக்கிய விபத்தில் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், ஷியாம் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கணேஷ் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க:சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!