தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
பல்லடம் அங்காளம்மன் கோயிலில் பிப்ரவரி 27-இல் குண்டம் திருவிழா
பல்லடம் அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமான பல்லடம் அங்காளம்மன் கோயில் 50-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி பிப்ரவரி 27-ஆம் (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 26-ஆம் (புதன்கிழமை) பல்லடம் நற்பணி மன்றப் பேரவை சாா்பில் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினா், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.