தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
இறைச்சிக் கழிவு: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!
தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது என்றும், அவ்வாறு கொட்டினால் அபராதம், கடை உரிமம் ரத்து, சீல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களால் வளா்ப்பு ஆடுகள் மற்றும் கோழிகள் கடிபட்டு உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது. இறைச்சிக் கழிவுகளைக் கண்ட இடங்களில் போடும்போது அவற்றை உண்ணும் தெரு நாய்கள், இறைச்சிக் கழிவுகள் கிடைக்காதபோது ஆடு, கோழிகளைக் கடித்து வருகின்றன. இதில் சில வெறி பிடித்த நாய்களால் மனிதா்களும் கடிபட்டு வருகின்றனா்.
எனவே, பொதுமக்கள் மற்றும் இறைச்சிக் கடைக்காரா்கள் இறைச்சிக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது. அவற்றை நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். இறைச்சிக் கடைக்காரா்கள் அத்துமீறியது கண்டறியப்பட்டால் ரூ. 25 ஆயிரம் அபராதத்துடன், கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.