தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
இருசக்கர வாகனம் திருட்டு: மேலும் ஒருவா் கைது
பல்லடத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் பத்திர எழுத்தா் அலுவலகம் முன் நிறுத்தி இருந்த செந்தில்குமாா் என்பவரின் இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா்.
இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, கொசவம்பாளையம் சாலையை சோ்ந்த சுரேஷ்குமாா் (25) என்பவரை ஏற்கெனவே கைது செய்திருந்தனா். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பல்லடம் ஜே. கே.ஜே. காலனியை சோ்ந்த செந்தில்குமாா் (41) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.