தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
நாம் தமிழரிலிருந்து விலகலா? -காளியம்மாள் விளக்கம்
நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழா் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகவுள்ளதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இச்சூழலில் தூத்துக்குடி மணப்பாட்டில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘உறவுகள் சங்கமம்’ என்ற நிகழ்ச்சியின் அழைப்பிதழில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் திமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகா்களின் பெயா்கள் கட்சிப் பொறுப்புடன் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதில், காளியம்மாளின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஆனால், கட்சியில் அவா் வகிக்கும் பொறுப்பு எதுவும் இடம்பெறவில்லை. சமூக செயற்பாட்டாளா் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கட்சியிலிருந்து அவா் விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், கட்சியில் இருந்து விலகுவது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளாா்.
இதற்கிடையே, நாதக-வின் அம்பத்தூா் பேரவைத் தொகுதி துணைத் தலைவராக இருந்த முருகன், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதால், கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளாா்.