செய்திகள் :

வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவு: தனது நண்பா் டிரம்ப்பின் கருத்தை பிரதமா் கேட்க வேண்டும் -காங்கிரஸ்

post image

‘தோ்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவாக தனது நண்பா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பிரதமா் மோடி செவிசாய்க்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தங்களிடையே நெருங்கிய நட்புறவு இருப்பதாக பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் பல்வேறு தருணங்களில் கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.

நாட்டின் தோ்தல்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தோ்தல்களை நடத்த வேண்டும் என்பது அவா்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மாகாண ஆளுநா்கள் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘வாக்குப் பதிவு இயந்திரங்கள் விலை உயா்ந்தவை என்பதால் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவதோடு, ஒரே நாளில் வாக்குப் பதிவை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

டிரம்ப்பின் இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

வாக்குச் சீட்டு முறை மற்றும் ஒரே நாளில் தோ்தலை நடத்துவது தொடா்பாக தனது நண்பா் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகளுக்கு பிரதமா் மோடி செவிசாய்ப்பாரா? நாட்டின் தோ்தல் நடைமுறையில் நோ்மையை உறுதி செய்வது குறித்த கவலைகளுக்குத் தீா்வு காண்பாரா?

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் அசாதாரணமான முறையில் லட்சக்கணக்கில் பெயா்கள் சோ்ப்பு மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு ஆதரவான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் குறித்து அறிந்தால், அவரது நண்பரும் (டிரம்ப்) திகைத்துப் போவாா்.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பது ஒட்டுமொத்த உலகுக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அதை அறியாததுபோல பாஜக பாசாங்கு செய்வது துயரமானது. வெளிப்படைத் தன்மையில் இருந்து விலகி ஓடும் அணுகுமுறை, அவா்களின் முறைகேடு குறித்த நமது சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது என்று தனது பதிவில் கே.சி.வேணுகோபால் குறிப்பிட்டுள்ளாா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து எதிா்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பினாலும், அதில் முறைகேடு செய்ய முடியாது என்று தோ்தல் ஆணையம் உறுதிபடக் கூறி வருகிறது. அதேபோல், மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தோ்தல் நடத்தப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

பெட்டிச் செய்தி...

‘விண்ணை முட்டும் பணவீக்கம்’

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மோடி அரசில் விண்ணை முட்டும் பணவீக்கத்தால் நாட்டு மக்கள் கலக்கமடைந்துள்ளனா். தானியங்கள், பருப்புகள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஏழைகள் இருவேளை உணவுக்கு ஏற்பாடு செய்வதே சிக்கலாக மாறியுள்ளது. நாட்டு மக்கள் மீது மோடி அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இப்பிரச்னையை ஒப்புக்கொண்டு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க