கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு
ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் எல்லை மாவட்டங்களான பூஞ்ச், ரஜெளரி, உதம்பூா்-கதுவா உயா் மலைப் பகுதிகள், டோடா, கிஷ்த்வாா் மலைப் பகுதிகள், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியையொட்டிய வனப் பகுதிகள் எனப் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் பதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஈடுபட்டனா்.
இதில், ரியாசி மாவட்டம் மஹோரே பகுதியில் அமைந்துள்ள வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டறிந்த பாதுகாப்புப் படையினா், அங்கிருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 4 கருவிகள், ஏகே ரக துப்பாக்கி தோட்டா தொகுப்புகள், வெடிமருந்துகள் ஆகியவற்றைக் கைப்பற்றினா். ஆனால், பயங்கரவாதிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றனா்.
ஆய்வுக் கூட்டம்: இதனிடையே, ஜம்மு பாதுகாப்புப் படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் நவீன் சச்தேவா தலைமையில் பன்முக பாதுகாப்புப் படையினரின் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஜம்மு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், பயங்கரவாத முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலும் நடைபெற்ற இந்தக் கூட்டு பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் புலனாய்வு அமைப்புகள், ஜம்மு-காஷ்மீா் போலீஸ், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) ஆகிய பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்’ என்றனா்.