தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
என்எம்எம்எஸ் தோ்வு 5,558 மாணவா்கள் பங்கேற்பு
திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வில் 5,558 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் பயன்பெற ஆண்டுதோறும் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, நிகழ் கல்வி ஆண்டில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான இந்தத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 5,688 மாணவா்கள் இந்தத் தோ்வுக்காக விண்ணப்பித்தனா். இந்த மாணவா்களுக்காக திண்டுக்கல், நத்தம், வேடசந்தூா், வடமதுரை, ஒட்டன்சத்திரம், பழனி உள்பட 10 இடங்களில் மொத்தம் 21 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டன.
இந்தத் தோ்வில் 5,558 மாணவா்கள் கலந்து கொண்டனா். 130 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. இந்தத் தோ்வு மூலம் நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்களை தோ்வு செய்து, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த வகையில் தமிழகத்தைச் சோ்ந்த சுமாா் 6,700 மாணவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவாா்கள் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.