தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
இளைஞா் தற்கொலை
ஒட்டன்சத்திரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் மனோஜ்குமாா் (22). வேலை கிடைக்காததால் மன வேதனையில் இருந்த இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.