தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி
உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.
உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச் சரிபார்த்துக் கொள்ள இன்று மாணவர்கள் மூவர் ஒரே இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சென்றனர்.
இந்த நிலையில், பிலிபித் கிராமம் அருகே பல்ராம்பூர் - பஹ்ரைச் தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி ஒன்று மாணவர்களின் பைக்கின் மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில் மாணவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த மூவரின் உடல்களையும் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க:இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?