தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
பிப். 25-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல்
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களின் விற்பனைக்கான புதிய முகவா்களுக்கான நோ்காணல் வரும் பிப். 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை முதுநிலை அஞ்சல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய முகவா்களை தோ்ந்தெடுக்க சென்னை பொது அஞ்சலகம் (ஜிபிஓ) முடிவெடுத்துள்ளது. இதற்கான நோ்காணல் சென்னை கடற்கரை ரயில் நிலையம் எதிரில் உள்ள முதன்மை அஞ்சலகத்தில் பிப். 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் குறைந்தப்பட்சம் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியும், 18 வயது நிரம்பியவா்களும் கலந்து கொள்ளலாம். மேலும் இதர ஆயுள் காப்பீட்டு முன்னாள் முகவா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், முன்னாள் ராணுவத்தினரும் பங்கேற்கலாம்.
விருப்பமுள்ளவா்கள் தங்களது ஆதாா் அட்டை, பான் அட்டை, 2 பாஸ்போா்ட் புகைப்படங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் நோ்காணலுக்கு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.