3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
``எல்லாருமே நமக்கு பிரண்ட்ஸ் தான்; திமுக-வை தவிர..!” - ஜெயகுமாருடன் ஓர் உரையாடல்
விகடன் மாணவர் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்கள் சிலர், பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து அவர்களின் கேள்விகளை முன்வைத்தனர்... இனி கேள்விகளும் அவரின் பதில்களும்...!
``2026 இல் உங்களுடைய தேர்தல் வியூகம் எப்படி இருக்கு?”
``தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளே பெரிய கட்சிகள். ஒன்று அதிமுக , இன்னொன்று திமுக. அதனால திமுகவை வீட்டுக்கு அனுப்பனும்னா, அது அதிமுகவால தான் முடியும். வாக்குகள் சிதையாமல் எங்களுக்கு மக்கள் ஓட்டு போடும்பொழுது கண்டிப்பாக அதிமுக தான் ஆட்சிக்கு வரும்
``புதிதாக வந்திருக்கும் கட்சிகள் உங்கள் வாக்கு வங்கியை பாதிக்கும் என்று நினைக்கின்றீர்களா?”
``எந்த வகையிலும் பாதிக்காது. அன்னைக்கு எங்கள பிடிக்கலைன்னு மக்கள் திமுக-வுக்கு ஓட்டு போட்டாங்க. இன்னைக்கு திமுகவ பிடிக்கலன்னா மக்கள் அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க. மற்ற கட்சிகளுக்கெல்லாம் போட மாட்டாங்க"
``விஜயுடைய ரசிகர்கள் தொண்டர்களாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கின்றதா?”
"நம்ம பேசி என்ன பிரயோஜனம் இருக்கு . என்னுடைய அரசியல் அனுபவத்துல நான் சொல்றேன்.... Democratic Stateல அரசியல்ல நிக்கிறதுக்கு எல்லாருக்கும் தான் ரைட் இருக்கு. ஆனா, மக்கள்தான் அங்கீகாரம் கொடுக்கணும், தீர்மானம் எடுக்கணும்.”

``இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு அரசியல் தெளிவு எந்தளவுக்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?”
``இப்போ உள்ள இளைஞர்களை நம்ம குறைத்து மதிப்பிட கூடாது. இப்போ இருக்க நிலைமையில அவங்க எல்லா வகையிலையும் உலகத்தை தெரிஞ்சவங்களா இருக்காங்க. அதுல மாறுபட்ட கருத்து இல்ல. ஆனால் இன்னும் அரசியலின் முழுமையை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.”
``நடிகர் கிங்காங் மகளின் திருமணத்தின் போது, கிங்காங் ஐ தூக்கி வைத்தது, `அவருடைய இயல்பை கொச்சைப்படுத்தியதாகவும், அதனால் அவருடைய மனநிலை பாதிக்கப்படலாம்’ என்றும் பலரும் கூறுகின்றனர். அதை பற்றி உங்கள் கருத்து என்ன ?”
"அவருடைய மனநிலை பாதிக்கப்பட்டது என்றால் அப்பவே அவர் வேணாம் என்று சொல்லி இருப்பார். அவரு ரொம்ப சந்தோஷமா தான் இருந்தாரு. அவரோட சந்தோஷம் தான் முக்கியம்,"
``வாரிசு அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?”
"திமுகவை பொருத்தவரை அது வாரிசு அரசியல் என்று சொல்லலாம். ஏனென்றால் அப்பன், பாட்டன், பேரன் .. இப்படின்னு இது ஒரு குடும்ப அரசியல். இவர்களைத் தாண்டி அந்த கட்சி வெளியே வரவில்லை. ஆனா எங்க கட்சில அப்படி இல்ல. அம்மாவிற்கு பிறகு ஒரு சாதாரண தொண்டன் கூட உயர்நிலைக்கு வர முடியுது."

``இப்பொழுது உள்ள விளையாட்டு துறை அமைச்சரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
``அவர் விளையாட்டா தான் இருக்காரு. சீரியஸா இல்லையே. என்ன டெவலப்மெண்ட் இருக்கு ஸ்போர்ட்ஸ்ல. ஒரு டெவலப்மெட்டும் இல்ல.”
``விஜய் அதிமுக கூட்டணி வரவேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். உங்கள் கருத்து என்ன ?”
"திமுகவை வீழ்த்தனும்... வீட்டுக்கு அனுப்பனும் என்ற ஒற்றை கருத்துடைய கட்சிகள் தாராளமாக எங்களிடம் வந்து சேரலாம்”
``தேர்தலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்ற வாசகத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?”
``எல்லாருமே நமக்கு பிரண்ட்ஸ் தான். திமுக-வை தவிர.”
``ஓபிஎஸ் அவர்கள் அதிமுக-வில் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?”
``அதெல்லாம் கட்சி பொதுச்செயலாளர் தான் முடிவு செய்ய வேண்டும்.”