செய்திகள் :

``எனக்கு தெரிந்திருந்தால் ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்..'' - நயினார் நாகேந்திரன்

post image

ஓபிஎஸ் தன்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நேரம் வாங்கித் தந்திருப்பேன் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்தப்போது அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓபிஎஸ் வெளிப்படையாகவே கடிதம் அனுப்பினார். திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியின் வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு வரவேற்பு அளிக்கக் கூட பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை என்பதால் அவருடைய ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 28) சங்கரன் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் , “பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

குறிப்பாக அவர்கள் சந்திக்க அனுமதி கேட்டார்களா? இல்லையா? என்பது கூட எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் பிரதமரை சந்திக்க அவருக்கு நேரம் வாங்கித் தந்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மதுரை: சு.வெ-வை விமர்சித்துப் பேசிய திமுக கவுன்சிலர்; பரபரத்த மாமன்றக் கூட்டம்!

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசனை விமர்சித்து திமுக கவுன்சிலர் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாநகராட்சி மாமன்றக் கூட்டம்மதுரை மாநகராட்சியில் வ... மேலும் பார்க்க

``காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கன்ட்ரோலில் செயல்படுகிறது" - பிரதமர் மோடி முழு உரை

மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ம... மேலும் பார்க்க

``இந்திரா காந்தியின் தைரியத்தில் 50% இருந்தால் கூட..!" - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் சிறப்பு வாக்காளர் சீர் திருத்தப்பணிக்கான எதிர்ப்பு எனப் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படுகிறது. நேற்றிலிரு... மேலும் பார்க்க

Poonch Shelling Hit: ``22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் ராகுல்" - காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா முன்னெடுத்த ஆப்ரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதில், இந்தியா மீது பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியது. அதில் பல இந்தி... மேலும் பார்க்க

"என் தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்... அந்த வலி எனக்கு புரியும்" - மக்களவையில் பிரியங்கா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்றில் இருந்து பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இன்று மக்களவையில் பிரியாங்கா காந்தி... மேலும் பார்க்க