3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
ராணிப்பேட்டை: பள்ளி வேனில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் - ஓட்டுநர் உட்பட இருவருக்கு 4 வருட சிறை!
ராணிப்பேட்டை மாவட்டம், நவல்பூர் பகுதியைச் சேர்ந்த வேன் உரிமையாளர் தயாளன் (வயது 51). தனியார் பள்ளி ஒன்றில், மாணவ - மாணவிகளை அழைத்துச் செல்லும் வாடகைதாரராக வேனை இயக்கி வந்தார் தயாளன். வேன் ஓட்டுநராக ராணிப்பேட்டை சிப்காட் அருகிலுள்ள புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (38) என்பவரை நியமித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 10-6-2022 அன்று மாலை வழக்கம்போல மாணவ - மாணவிகளை அவரவர் வீடுகளில் விடுவதற்காக பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றனர்.
அனைத்து மாணவர்களும் இறங்கிவிட்ட நிலையில், கடைசியாக 13 வயது மாணவி ஒருவரை மட்டும் சிப்காட் பகுதியிலுள்ள அவரின் வீட்டில் விடுவதற்காகச் சென்றனர். அப்போது, வேன் உரிமையாளர் கோபிநாத் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். ஓட்டுநர் கோபிநாத்தும் பாலியல் வக்கிரத்துடன் மாணவியை நெருங்கியிருக்கிறார்.

இது குறித்து, மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததால், அவர்கள் உடனடியாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீன் வழங்கப்படாமல் நீதிமன்றக் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் துரிதமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து, நேற்றைய தினம் (28-7-2025) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் குற்றம் புரிந்த தயாளன், கோபிநாத் இருவருக்குமே 4 வருட சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.