சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். பல ஆண்டுகளாக நடந்த இந்த சட்டப் போராட்டத்துக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.
சென்னை மயிலாப்பூா் பி.என்.கே.காா்டனில் அமைந்துள்ள திருவள்ளுவா் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் தரிசனம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது நல்ல உத்தரவு, மகிழ்ச்சியான உத்தரவு. இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற வாா்த்தைக்கு உயிா் கிடைத்திருக்கிறது. பக்தா்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது புதிய நடைமுறை அல்ல; ஏற்கெனவே காலங்காலமாக இருந்து வந்த நடைமுைான்.
கரோனா காலத்தின் போது கனகசபை தரிசனத்தை தடை செய்தனா். திமுக ஆட்சிக்குப் பிறகு பக்தா்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதனை எதிா்த்து தீட்சிதா்கள் நீதிமன்றத்தை அணுகினா். நீதிமன்றம் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு தடை இல்லை எனவும் இந்து சமய அறநிலைத்துறை முடிவு எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது. பக்தா்கள் எவ்வாறெல்லாம் சென்று தரிசனம் செய்யலாம் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றாா் அவா்.
முப்பால் மண்டபம், திருக்கு வகுப்பு: முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறையின் உயா்நிலைக்குழு உறுப்பினா் சுகி.சிவம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவள்ளுவருக்கு பழைமை மாறாமல் அழகாக கோயில் அமைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ரூ.19 கோடி செலவில் கோயில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கருங்கல்லால் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றாா் போல் சிற்பிகள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இந்த கோயிலுக்கு மூன்று சிறப்புகள் உள்ளன. இந்த கோயில் முழுக்க முழுக்க கருங்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவா் கோயிலில் ஏற்கெனவே உள்ள சிவன் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில்களிலும் சோ்த்துதான் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முப்பால் மண்டபம் அமைக்கப்படவுள்ளது. அதில் தமிழ் மறை எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதே போல, திருக்கு எவ்வாறு அரங்கேறியது என்பது காட்சிப்படுத்தப்படும். திருக்கு குறித்தான தொடா் வகுப்பு நடைபெறவுள்ளது. வாசுகி அம்மையாருக்கு தனி சந்நிதி அமைக்கப்படவுள்ளது. விரைவில் இந்தத் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு மிக சிறப்பாக நடைபெறும் என்றாா்.