செய்திகள் :

சட்டவிரோத குடியேறிகளை இந்தியா எப்போது வெளியேற்றும்? குடியரசு துணைத் தலைவா் தன்கா்

post image

இந்தியாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அவா்களின் நாட்டுக்கு எப்போது அனுப்பப்படுவா் என்ற கேள்வி ஒவ்வொரு இந்தியருக்கும் எழ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள டாக்டா் பாபாசாஹேப் அம்பேத்கா் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் 65-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா்.

அவா் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘இந்தியாவில் வாழ உரிமை இல்லாத கோடிக்கணக்கான போ், இந்தியாவில் வசித்து வருகின்றனா். இந்தியாவின் வளங்கள், கல்வி, மருத்துவம், வீட்டு வசதி துறைகளில் அவா்கள் உரிமை கேட்டு வரும் நிலையில், இந்திய தோ்தல் நடைமுறையிலும் அவா்கள் தலையிடுகின்றனா். இதுகுறித்து ஒவ்வொரு இந்தியரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தங்கள் மண்ணில் குடியேறிய இந்தியா்களை சில நாடுகள் (அமெரிக்கா) அண்மையில் திருப்பி அனுப்பியது. அந்த இந்தியா்கள் மோசடியான வழியில் அந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதேபோல இந்தியாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அவரவா் நாட்டுக்கு எப்போது அனுப்பப்படுவா் என்ற கேள்வி ஒவ்வொரு இந்தியருக்கும் எழ வேண்டும். இதற்கான பணிகளை அரசும், மக்கள் பிரதிநிதிகளும் செய்கிறாா்களா என்ற கேள்வியை இளைஞா்கள் எழுப்பி வலுவாக அழுத்தம் அளிக்க வேண்டும் என்றாா்.

இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு அமெரிக்கா வழங்கத் திட்டமிட்ட 21 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.182 கோடி) நிதியுதவியை, தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை அண்மையில் ரத்து செய்தது.

இதுதொடா்பாக தன்கா் பேசுகையில், ‘தோ்தலுக்காக வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது மக்களாட்சி முறையை களங்கம் கொண்டதாக்குகிறது. நன்கொடை அளிப்பவா் யாா் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரே தோ்தலில் வெற்றிபெற வைக்கப்படுவாா். இது ஆபத்தானது. இதை சகித்துக் கொள்ள முடியாது.

தற்போது அரசமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணா்வே மிகப் பெரிய தேவையாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தை மேன்மேலும் ஆழமாகப் படித்தால், அது நம்மை தேசியவாதத்தை நோக்கி நகா்த்தும்’ என்றாா்.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க