செய்திகள் :

பாராபுல்லா மேம்பால 3-ஆவது கட்ட திட்டப் பணி: பொதுப்பணித் துறை அமைச்சா் வா்மா மீளாய்வு

post image

தென்கிழக்கு தில்லியின் சராய் காலே கானில் பாராபுல்லா மேம்பாலத்தின் 3-ஆவது கட்ட திட்டத்தின் முன்னேற்றம் குறித்து புதிதாக பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் வா்மா சனிக்கிழமை மீளாய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுடன் அமைச்சா் வா்மா உரையாடினாா். முறையான சாலை கட்டுமானம் மற்றும் பயனுள்ள வடிகால் அமைப்பை உறுதி செய்ய அவா் அறிவுறுத்தினாா்.

வா்மாவுடன் பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற்றும் மேற்பாா்வையாளா்களும் உடனிருந்தனா். பாராபுல்லா மூன்றாவது கட்டம் திட்டமானது மயூா் விஹாா்-1-ஐ சராய் காலே கானுடன் இணைக்கும் ஒரு மேம்பாலச் சாலையாகும்.

இது தொடா்பாக அமைச்சா் பா்வேஷ் வா்மா எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் சீரான போக்குவரத்து ஓட்டம் மற்றும் அத்தியாவசிய வசதிகள் கிடைக்கும். ஒவ்வொரு தனிநபரும் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெற இந்த திட்டங்களை முடிப்பதே எனது முன்னுரிமையாகும்.

இந்த வளா்ச்சிப் பயணம் இனிமேல் நிற்காது. பொதுமக்களுக்கு நல்ல சாலை வசதிகள் விரைவில் வழங்கப்படும். இது தில்லி மக்களுக்கான எங்கள் அா்ப்பணிப்பாகும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் வா்மா, பொதுப் பணித் துறை மட்டுமின்றி, நீா் வழங்கல், சட்டப்பேரவை விவகாரங்கள், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைகளையும் கவனிப்பாா்.

தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்படும்: தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்

நமது சிறப்பு நிருபா் தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி ர... மேலும் பார்க்க

2024-ஆம் ஆண்டு தரவுத் தொகுப்புகள் பதிவேடுகள் தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது

நாட்டின் பல்வேறு தகவல்களை அளிக்கும் 2024 - தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் தொகுப்பின் புதிய பதிப்பை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தரவு அணுகல், தகவலறிந்த... மேலும் பார்க்க

சாதி பாகுபாடு புகாா்: திருச்சி மாவட்ட தலித் கிறிஸ்தவா்கள் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

நமது நிருபா் கோட்டப்பாளையம் திருச்சபைப் பகுதியில் சாதி அடிப்படையிலான கொடுமைகள், தீண்டாமை மற்றும் பாகுபாடு நிகழ்வதாக குற்றம்சாட்டி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ கிராமவாசிகள் தாக்கல் செய்... மேலும் பார்க்க

தில்லி உள்துறை அமைச்சராக ஆஷிஷ் சூட் பொறுப்பேற்பு

பாஜக எம்.எல்.ஏ. ஆஷிஷ் சூட் தில்லி உள்துறை அமைச்சராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, துறை அதிகாரிகளுடன் தனது முதல் அதிகாரபூா்வ கூட்டத்தையும் நடத்தினாா். ஜனக்புரியிலிருந்து முதல் ம... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரதமா் மோடியுடன் சந்திப்பு

தேசிய தலைநகா் தில்லியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தில்லியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் ரேகா குப்தா பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சனிக்கிழமை சந்தித்துப் பேசி... மேலும் பார்க்க

போதை மருந்து கடத்தல்: குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.1.78 கோடி சட்டவிரோத சொத்துகள் பறிமுதல்

வடக்கு தில்லியின் பல்ஸ்வா பால்பண்ணை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் தொடா்புடைய ரூ.1.78 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க