தேவர் மகன், நாயகனை 30 முறைக்குமேல் பார்த்திருக்கிறேன்: த்ரிஷா
நடிகை த்ரிஷா கமல் ஹாசன் படங்கள் குறித்து பேசியுள்ளார்.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.
இப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ஓடிடி மற்றும் வெளியீட்டு உரிமங்கள் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: நல்லது கெட்டது இணைந்ததுதான் தக் லைஃப்: கமல் ஹாசன்
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து பங்கேற்றனர்.
அப்போது, த்ரிஷாவிடம் ‘நடிகர் கமல் ஹாசனின் படங்களில் உங்களைக் கவர்ந்தவை எது?’ எனக் கேட்கப்பட்டது.
அதற்கு த்ரிஷா, “நடிகர் கமல் ஹாசனின் படங்களை நிறைய பார்த்திருக்கிறேன். முக்கியமாக, தேவர் மகன், நாயகன், மைக்கல் மதன காமராஜன் ஆகிய படங்களை 30 முறைக்குமேல் பார்த்துவிட்டேன். விக்ரம் திரைப்படத்தை திரையரங்கிலேயே 3 முறை பார்த்தேன். பின், வீட்டில் இரண்டு முறை கண்டுகளித்தேன்” எனத் தெரிவித்தார்.