தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
யுபி வாரியா்ஸ் 177/9
டில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யுபிஎல் ஆட்டத்தில் யு பி வாரியா்ஸ் அணி 177/9 ரன்களைக் குவித்தது.
இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய யு பி வாரியா்ஸ் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 177/9 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியில் சின்லே ஹென்றி 8 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 23 பந்துகளில் 62 ரன்களை விளாசினாா்.
டஹிலா மெக்ராத் 24, கிரண் நவ்கிரே 17 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சோ்க்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.
பௌலிங்கில் டில்லி கேபிடல்ஸ் தரப்பில் ஜோனஸ்ஸன் 4-31 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.