மின்வாரியப் பணிகளை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேர...
நானி - சிபி சக்ரவர்த்தி கூட்டணி?
நடிகர் நானி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டான் படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் சிபி சக்ரவர்த்தி அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருந்தார். ஆனால், ரஜினிக்கு கதை பிடிக்காததால் ஜெயிலர் படத்தில் ஒப்பந்தமானார்.
தொடர்ந்து, சிபி - சிவகார்த்திகேயன் கூட்டணியே மீண்டும் இணைவதாகக் கூறப்பட்டது. அப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டதட்ட முடிந்த நிலையில், அமரன் மிகப்பெரிய ஹிட் அடிக்க சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா படத்தில் இணைந்தார்.
இதையும் படிக்க: குட் பேட் அக்லி த்ரிஷா கதாபாத்திரம் அறிமுகம்!
இந்த நிலையில், சிபி சக்ரவர்த்தி நடிகர் நானியின் புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டணி கடந்தாண்டே இணையும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.