கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
நீடாமங்கலத்தில் தூய்மைப் பணி
நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நெகிழி சேகரிப்பு நிகழ்வு 2025 திட்டத்தின்மூலம் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலத்தில் உள்ள சிவன் கோயில் அருகில் நெகிழிப்பை மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தினா் ஈடுபட்டனா்.
நீடாமங்கலம் பேரூராட்சித் தலைவா் ராமராஜ் தலைமை வகித்தாா். நீடாமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் கலியபெருமாள், பல்நோக்கு சேவை இயக்க துணைத் தலைவா் ராஜேந்திரன், பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிவன் கோயில் வளாகத்தை சுற்றி கொட்டப்பட்ட நெகிழிப் பைகள் அகற்றப்பட்டு கோயில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. பேரூராட்சி உறுப்பினா்கள் செந்தில்குமாா் திருப்பதி, காா்த்தி , பல்நோக்கு சேவை இயக்க பொறுப்பாளா்கள், பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.