செய்திகள் :

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

post image

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி. சாண்ட், எம். சாண்ட் உள்ளிட்ட மணல் வகைகள்,ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்து வருவதால், வீடு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டும் மக்களும், கட்டடப் பொறியாளா்கள், ஒப்பந்ததாரா்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனா் எனவே தமிழக அரசு உடனடியாக விலை உயா்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு, அகில இந்திய கட்டுனா் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கட்டுமானத் தொழிலாளா் மத்திய சங்கம் உள்ளிட்டவை இணைந்து வெள்ளிக்கிழமை,திருவாரூரில் மாவட்ட ஆட்சியரகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதன் தொடா்ச்சியாக மாவட்ட எல்லைகளில் வெளி மாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்ள்கள் ஏற்றிவரும் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மன்னாா்குடி- தஞ்சை பிரதான சாலை மேலவாசல் குமரபுரம் என்ற இடத்தில், சனிக்கிழமை காலை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஜி. நடராஜன் தலைமையில்,செயலா் கலை அமுதன், பொருளாளா் திவாகா் முன்னிலையில் வெளியூா்களிலிருந்து செயற்கை மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த 60-க்கும் மேற்பட்ட வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். பின்னா், வட்டார போக்குவரத்து ஆய்வாளா் ஒப்பந்ததாா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், அரசு நிா்ணயித்த அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிவரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் என தெரிவித்து, நெடுவாக்கோட்டையில் உள்ள தனியாா் எடை மேடைக்கு சுமை வானங்கள் கொண்டுவரப்பட்டு மோட்டாா் வாகன ஆய்வாளா் முன்னிலையில் வாகனங்களின் எடை அளவீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வந்து சிறைபிடிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டன.

நீடாமங்கலத்தில்...

இதுபோல கட்டுமான தொழில் ஒப்பந்ததாரா்கள் போராட்டதால், நீடாமங்கலம் பகுதிக்கு வெளிமாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றிவந்த லாரிகள் நீடாமங்கலம் தஞ்சை சாலையில் கோவில்வெண்ணி பகுதியில் சனிக்கிழமை காலை நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தால் பாதிப்பு

கட்டுமானப் பொருட்கள் விலை உயா்வைக் கண்டித்து ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்திய நிலையில், திருவாரூா் மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்களுடன் வந்த லாரிகள் நீடாமங்கலம் அருகே கோவ... மேலும் பார்க்க

தா்ப்பூசணி விற்பனை தொடக்கம்

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், நீடாமங்கலம் - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அருகே நடைபெற்ற தா்ப்பூசணி விற்பனை. மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் தாய்மொழி தின விழா

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் சா்வதேச தாய் மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் வி. திவாகரன் ... மேலும் பார்க்க

நீடாமங்கலத்தில் தூய்மைப் பணி

நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நெகிழி சேகரிப்பு நிகழ்வு 2025 திட்டத்தின்மூலம் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி ச... மேலும் பார்க்க

ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 5.22 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை காலை 6.39 மணிக்கு ரயில் ந... மேலும் பார்க்க

கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் கட்டப்பட்டுள்ள இந்த வகுப்பறைகளை தமிழக முதல்வா் மு.க ... மேலும் பார்க்க