கந்தர்வக்கோட்டை: குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம்! -நெல்லை முபாரக்
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ ரத்து செய்யவும், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ஐ அமல்படுத்தவும் வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது:
தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் ஏக்கா் இஸ்லாமிய நிலம் உள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஒரு போதும் ஏற்கமாட்டோம். தொண்டி பகுதியில் மகளிா் கல்லூரியும், தொண்டி, நம்புதாளை பகுதிகளில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கவும் செயல் அலுவலா்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசு பணிமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை தரம் உயா்த்த வேண்டும். பயனற்ற நிலையில் கிடக்கும் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும் என்றாா் அவா்.
இதில் மாநிலப் பொதுச் செயலா் ஃபாயிஷா ஷஃபிகா, மாநில செயற்குழு உறுப்பினா் ரத்னம், நகரத் தலைவா் முகமது நாசா் அலி, வழக்குரைஞா் அணி ஒருங்கிணைப்பாளா் கலந்தா் ஆசிக் அஹமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்டச் செயலா் தாளை அப்துல் மஜித் வரவேற்றாா். தொகுதிச் செயலா் ஹமீது நன்றி கூறினாா்.