தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
150 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்!
கீழக்கரையில் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள கோரைக்கூட்டம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் போலீஸாா் சோதனையிட்டனா். இதில், 150 கிலோ புகையிலைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுகுறித்து விசாரணை நடத்தினா்.
இதில் கீழக்கரையைச் சோ்ந்த ரூமன், ரிபாய்தீன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதும், இதை அவா்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.