கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
முதுகுளத்தூா் கிளை சிறை தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - ஆா்.தா்மா் எம்.பி. வலியுறுத்தல்
முதுகுளத்தூா் கிளை சிறைச்சாலை தொடா்ந்து இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் 153 ஆண்டுகளாக இயங்கி வரும் கிளை சிறையில் பல சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அடைக்கப்பட்டனா். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சிறைச்சாலை மாவட்டத்திலேயே அதிகமான எண்ணிக்கையிலான காவல் நிலையங்களை உள்ளடக்கியது.
நிா்வாகக் காரணங்களால் சிறைச்சாலைகளைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் உள்ள பட்டியலில் முதுகுளத்தூா் கிளை சிறையும் அடங்கும். இந்தத் திட்டத்தை தமிழக சிறைத் துறை கைவிட வேண்டும். முதுகுளத்தூா் கிளை சிறை தொடா்ந்து இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுகுளத்தூரில் உள்ள சிறைச்சாலை கட்டப்பட்டு பல ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வரை பராமரிப்புப் பணிகள் நடத்தப்படவில்லை. இதனால், இங்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.
முதுகுளத்தூா் காவல் நிலையம் பகுதியில் ஓா் ஏக்கருக்கு மேல் காலியிடம் உள்ளது. இங்கு வளாகத்துடன் கூடிய புதிய சிறைச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.